மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட 96 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகரில் உள்ள மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் அலுவலகம் முன்பு மின்ஊழியர் சி.ஐ.டி.யு. மத்தியஅமைப்பின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் மாவட்டதலைவர் சௌந்தர பாண்டியன் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் மகாலட்சுமி, செயலாளர் தேவா உள்ளிட்டோர் பேசினர். விருதுநகர் கிளை செயலாளர் சுகுமார் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 96 பேர் கைது செய்யப்பட்டனர்.