குமரி மாவட்டத்தில் 94.02 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குமரி மாவட்டத்தில் 94.02 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் குமரி மாவட்டம் 12-வது இடத்தை பிடித்தது.

Update: 2023-05-19 20:48 GMT

நாகர்கோவில்:

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குமரி மாவட்டத்தில் 94.02 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் குமரி மாவட்டம் 12-வது இடத்தை பிடித்தது.

94.02 சதவீதம் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்தது. குமரி மாவட்டத்தில் 257 பள்ளிகளைச் சேர்ந்த 10,342 மாணவர்களும், 11,502 மாணவிகளுமாக மொத்தம் 21,844 பேர் தேர்வு எழுதினர்.

இந்தநிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகலில் வெளியானது. இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9,332 மாணவர்களும், 11,205 மாணவிகளுமாக மொத்தம் 20,537 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 90.23-ம், மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 97.42-ம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குமரி வருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம் 94.02 ஆகும்.

12-வது இடம்

கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் குமரி மாவட்டம் 95.08 சதவீதம் தேர்ச்சி பெற்று 4-வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 94.02 சதவீதம் தேர்ச்சி பெற்று 12-வது இடத்துக்கு பின்தங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்