பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.68 சதவீதம் தேர்ச்சி

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.63 சதவீதம் குறைந்துள்ளது.

Update: 2023-05-08 18:45 GMT

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.63 சதவீதம் குறைந்துள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கியது.நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 3 ஆயிரத்து 439 மாணவர்களும், 4 ஆயிரத்து 11 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 450 பேர் எழுதினர். இந்த தேர்வு கடந்த மாதம் (ஏப்ரல்) 3- ந்தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ேநற்று வெளியிடப்பட்டன. இதில் நாைக மாவட்டத்தில் 3 ஆயிரத்து 36 மாணவர்களும், 3 ஆயிரத்து 720 மாணவிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 756 பேர் தேர்ச்சி பெற்றனர்.

90.68 சதவீதம் தேர்ச்சி

இதில் ஆண்கள் 88.28 சதவீதமும், பெண்கள் 92.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 90.68 ஆகும்.

இது கடந்த ஆண்டை விட 1.63 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு 92.31 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.

வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

நாகை மாவட்டத்தில் உம்பளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி, செம்போடை அரசு மேல்நிலைப்பள்ளி, கருப்பம்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாகை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டு மாவட்டத்தில் 6 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்