9 வணிக நிறுவனங்களுக்கு சீல் வைப்பு

நெல்லையில் சொத்து வரி செலுத்தாத 9 வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2023-02-15 21:44 GMT

நெல்லை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் நீண்ட காலமாக பாக்கி வைத்திருப்போர் கட்டிடங்களுக்கு சீல் வைப்பது மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 6 வணிக நிறுவனங்கள் மற்றும் 15-வது வார்டு நேதாஜி சாலையில் 3 வணிக நிறுவனங்கள் நீண்டகாலமாக சொத்து வரி செலுத்தவில்லை. இதையொட்டி அந்த 9 நிறுவனங்களையும் மாநகராட்சி பணியாளர்கள் மூடி சீல் வைத்தனர்.

இதுதவிர மேலப்பாளையம் பாத்திமா நகர், பாளையங்கோட்டை தெற்கு பஜார், தெற்கு முத்தாரம்மன் கோவில் தெரு, செந்தில்நகர், டி.வி.எஸ். நகர் பகுதிகளில் 5 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. எனவே சொத்து வரி, குடிநீர் கட்டண நிலுவையை உடனடியாக செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டுளளார்.

Tags:    

மேலும் செய்திகள்