நர்சு வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு

மேல்மலையனூர் அருகே நர்சு வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு

Update: 2023-03-11 18:45 GMT

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே புது மரக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி ரமணி பாய்(வயது 52). மேல்செவளாம்பாடி அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று பணி முடிந்ததும் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள அவரது கணவர் மற்றும் மகனை பார்த்து வர சென்றார். 3 நாளைக்கு பின்னர் ரமணிபாய் அங்கிருந்து மீண்டும் புது மரக்கோணம் கிராமத்துக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்