திருச்செங்கோட்டில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு

Update: 2023-07-02 18:45 GMT

திருச்செங்கோடு

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 74). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி மனோன்மணி (70). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மூதாட்டியிடம் நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்