சூதாடிய 9 பேர் கைது

சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-09 19:42 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் செங்கமலப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் பின்புறம் அதிக அளவில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்ற போது சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த முத்து (வயது 49), ராஜேந்திரன் (45), சங்கர் (43), மாரிமுத்து (49), யோகராஜ் (46), முரளி (34), மார்ட்டின்ராஜ் (45), பீட்டர் (29), சார்லஸ் (31) ஆகியோர் அங்கு காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.48,250-யை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்