சூதாடியதாக 9 பேர் கைது
கபிஸ்தலம் அருகே சூதாடியதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் போலீசார் கபிஸ்தலம் போலீஸ் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள சோமேஸ்வரபுரம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பழகனுக்கு சொந்தமான வீட்டில் திருச்சோற்றுத்துறையை சோ்ந்த முருகன்(வயது50), திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த மாதவன்(49), இளங்கோவன்(55), பசுபதி கோவிலை சேர்ந்த கிருஷ்ணகுமார்(44), ஜஹாங்கீர்( 64), தஞ்சையை சேர்ந்த கிருஷ்ணகுமார்(49), சங்கர்(50), முத்துவேல்(49), மணலூரை சேர்ந்த ராஜபாண்டியன்(44), ஆகிய 9 பேர் பணம் வைத்து சூதாடியதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் 9 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து ைகது செய்து அவர்களிடம் இருந்து ரூ.53ஆயிரம் மற்றும் 9 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.