9 மின் இணைப்புகளுக்கு அபராதம்
முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 9 மின் இணைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கல்லிடைக்குறிச்சி கோட்டம் விக்கிரமசிங்கபுரம் அலுவலகத்தில் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி உத்தரவின்பேரில் கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வழிகாட்டுதலின்படி பெருந்திரள் மின்னாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1647 மின் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மின்வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட வீதப்பட்டியலை முறைகேடாக மாற்றி பயன்படுத்திய 9 மின் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக ரூ.94 ஆயிரத்து 978 அபராதம் விதிக்கப்பட்டது.