சேலம் சுகவனேசுவரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.9½ லட்சம்

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.9½ லட்சம் எண்ணப்பட்டது.

Update: 2022-12-06 19:57 GMT


சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நிரந்தர மற்றும் திருவிழா உண்டியல்கள் என மொத்தம் 9 உள்ளன. இந்த உண்டியல்கள் எண்ணுவதற்காக கோவில் வளாகத்திற்கு நேற்று எடுத்து வரப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை சேலம் உதவி ஆணையர் ராஜா, செயல் அலுவலர் சரவணன், அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா, ஆய்வர் உமா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

உண்டியல்கள் எண்ணும் பணியில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.9 லட்சத்து 53 ஆயிரத்து 330 இருந்தது. அதில் தங்கம் 46 கிராம் 750 மில்லியும், வெள்ளி 377 கிராமும், 10 அமெரிக்க டாலர் ஆகியன இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்