காலை உணவு திட்ட தொடக்க விழாவில் ரூ.9 லட்சத்தில் தட்டு, டம்ளர்

மடவாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட தொடக்க விழாவில் ரூ.9 லட்சத்தில் தட்டு, டம்ளர்களை நல்லதம்பி எம்.எல்.ஏ.வழங்கினார்.

Update: 2023-08-25 20:09 GMT

திருப்பத்தூர்

மடவாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட தொடக்க விழாவில் ரூ.9 லட்சத்தில் தட்டு, டம்ளர்களை நல்லதம்பி எம்.எல்.ஏ.வழங்கினார்.

திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி மடவாளம் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி மாடப்பள்ளி அருகிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து சீர்வரிசையுடன் மயிலாட்டம், ஒயிலாட்டம் கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் அண்ணா சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு நல்லதம்பி எம்.எல்.ஏ.மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவி பெற்றோர்கள் சீர்வரிசையுடன் பள்ளிக்கு ஊர்வலமாக மேளதாளங்ளுடன் வந்தனர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன் வரவேற்றார்.

விழாவில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பொங்கல், கேசரி வழங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

அதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள 916 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் நல்லதம்பி எம்.எல்.ஏ. ரூ.9 லட்சத்தில் புதிதாக சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய குழு உறுப்பினர் கஸ்தூரி ரகு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்