ஒரே இடத்தில் 89 நடுகற்கள் கண்டுபிடிப்பு

ஓசூர் அருகே ஒரே இடத்தில் 89 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-04-19 18:45 GMT

ஓசூர்

நடுகற்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் பக்கமுள்ள கூலி சந்திரம் கிராமத்தில் ஒரே இடத்தில் 89 நடுகற்களை அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவை சார்ந்த அறம்கிருஷ்ணன், மஞ்சுநாத், முனிகிருஷ்ணப்பா ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தமிழக நடுகற்கள் வரலாற்றில் அதிக நடுகற்கள் இருப்பது மட்டுமில்லாமல் அதிக நடுகற்கள் தொகுப்பு இருப்பதும் கிருஷ்ணகிரி மாவட்டம் தான். இம்மாவட்டத்தில் 8-ம் நாற்றாண்டு தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் தொடர்ச்சியாக அடையாள படுத்தப்பட்டு வருகின்றன.

18-ம் நூற்றாண்டு

கெலமங்கலத்தில் இருந்து பாரந்தூர் செல்லும் சாலையில் கூலிசந்திரம் என்ற சிற்றூர் உள்ளது. பல ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ஊர் பண்டிகைகள் செய்யும் பொது இடத்தில் இந்த 89 நடுகற்களும் சிதறி கிடக்கின்றன. இங்கு சிவன் கோவில் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. நடுகற்கள் தொகுப்பு என்பது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. ஓசூர் தேர்பேட்டை, நாகொண்டபள்ளி, சிங்கிரிப்பள்ளி, பிக்கனப்பள்ளி, குடி செட்லு, கொத்தூர், ஒன்னல்வாடி, உளிவீரனபள்ளி, பெண்ணேஸ்வர மடம், சின்னகொத்தூர், தொகரப்பள்ளி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நடுகற்கள் இருக்கின்றன.

தற்போது கூலிசந்திரத்தில் 89 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் நடுகற்கள் குரும்பர் இனமக்கள் வழிபடும் 14 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் ஒரே இடத்தில் சிதறி கிடக்கின்றன. இங்கு கட்டப்பட்டு வரும் சிவன் கோவிலை சுற்றியும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்