சேலத்தில் மக்கள் நீதிமன்றம்: 84 விபத்து வழக்குகளில் தீர்வு

சேலத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 84 விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

Update: 2023-03-11 21:24 GMT

சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேற்று மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சிறப்பு மாவட்ட நீதிபதி தாண்டவன் தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் தங்கராஜ் வரவேற்றார்.

மாவட்டம் முழுவதும் 6 அமர்வுகளில் மொத்தம் 228 வழக்குகள் எடுத்து கொள்ளபட்டன. இதில் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் ரு.4 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 221 தீர்வு தொகையாக பெறப்பட்டது.

மேலும் செய்திகள்