8¾ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

சேலம் வழியாக கேரள சென்ற ரெயிலில் 8¾ கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-29 20:09 GMT

சூரமங்கலம்:

சேலம் வழியாக கேரள சென்ற ரெயிலில் 8¾ கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.சேலம் வழியாக கேரள சென்ற ரெயிலில் 8¾ கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

ரெயிலில் சோதனை

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தினர். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சாமல்பட்டி- சேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.

ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீசார் அந்த ரெயிலில் சோதனை நடத்தினர். இதில் முன்பதிவு இல்லாத பெட்டியில் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கஞ்சா பறிமுதல்

பிடிபட்ட நபர், தேனி மாவட்டம் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (வயது 21) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரிடம் இருந்து 8 கிலோ 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து பாண்டீஸ்வரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்