திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-04-29 13:40 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

திருப்பத்தூர் இந்து சமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள் தனி தாசில்தார் தா.குமாரி அங்கிருந்து ஆம்பூர் தாசில்தாராகவும், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் து.பிரியா வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மு.மோகன் வருவாய்பின் தொடர்பணி (ஏலகிரிமலை) தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஜோ.பூங்கொடி அங்கிருந்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்பூர் தாசில்தார் கே.மகாலட்சுமி திருப்பத்தூர் பேரிடர் மேலாண்மை தனிதாசில்தாராகவும், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அனந்த கிருஷ்ணன், கோட்ட கலால் அலுவலராகவும், வருவாய்பின் தொடர்பணி தனி தாசில்தார் ச.பத்மநாபன் தேர்தல் தனி தாசில்தாராகவும், ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலர் மு.நவநீதம் பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் (தேர்தல் -2)அங்கிருந்து திருப்பத்தூர் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அங்கிருந்த டி.கே.சிவனேசன் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராகவும் (தேர்தல் -2) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக பணியில் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்