விவசாயி வீட்டில் 8½ பவுன் நகைகள் திருட்டு
விவசாயி வீட்டில் 8½ பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முசிறி தாலுகா வடக்கு நல்லியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 55). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் அவரது தாயார் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது.
இது குறித்து, அவர் தோட்டத்துக்கு சென்ற மகனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 8½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.