கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் 8 பவுன் நகை திருட்டு

கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் 8 பவுன் நகை திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

Update: 2022-06-04 16:47 GMT

காரியாபட்டி

காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அரசகுளம் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி(வயது 55) என்பவர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு கும்பத்தில் ஊற்றிய தண்ணீரை தெளித்த போது பக்தர்கள் முண்டியடித்தனர். கூட்டத்தில் இருந்து வெளியே வந்து மீனாட்சி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பார்த்தபோது யாரோ திருடிச் சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மீனாட்சி ஆவியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இதேபோல் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அரசகுளம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி(55) என்பவர் கோவில் கும்பாபிஷேக கூட்டத்தில் இருந்தபோது தமிழரசி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

Tags:    

மேலும் செய்திகள்