வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-04 11:50 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60). முன்னாள் ராணுவவீரர். தற்போது வக்கீலாகவும் உள்ளார். இவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் குடும்பத்தினர் 8 பேர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். குறைதீர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு திடீரென அவர்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மிரட்டுகின்றனர்

இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான நிலம் வேலூர் காந்திரோட்டில் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல விடாமல் அடியாட்களை வைத்து சிலர் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்