கோட்டூர்புரத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் திருட்டு - வேலைக்காரி, டிரைவர் கைவரிசையா?

கோட்டூர்புரத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்தது. இதுக்குறித்து போலீசார் வேலைக்காரி, டிரைவர் திருடினார்களா? அல்லது வேறு யாரேனும் இந்த திருட்டில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.;

Update:2023-06-03 09:51 IST

சென்னை கோட்டூர்புரம் 4-வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் மனோகர். கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவருக்கான அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இவருடன் மனைவி சாவித்ரி, உறவினர் லீலா (வயது 75) வசிக்கின்றனர். சமீபத்தில் இவருடைய மாமியாருக்கு உடல்நலம் சரி இல்லாமல் போனது. எனவே மனோகர் தனது மனைவியுடன் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்றார். உறவினர் லீலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் சென்னை திரும்பிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பீரோ மற்றும் படுக்கை அறையில் இருந்த தங்கம், வைரம் என ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து மனோகர், வீட்டு வேலைக்கார பெண் வரலட்சுமி, கார் டிரைவர் பாலு ஆகியோரிடம் விசாரித்தபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டனர். இந்த நிலையில் வரலட்சுமி சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்று விட்டார். கார் டிரைவர் பாலுவும் மாயமானார். இதனால், அதிர்ச்சி அடைந்த மனோகர் நகை மாயமானது குறித்து கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மாயமானதாக கூறப்படும் நகையை பாலுவும், வரலட்சுமியும் சேர்ந்து திருடினார்களா? அல்லது வேறு யாரேனும் இந்த திருட்டில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்