150 மதுபாட்டில்களுடன் 8 பேர் கைது
ராமேசுவரத்தில் நடந்த அதிரடி சோதனையில் 150 மதுபாட்டில்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் துணை சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மதுபாட்டில்கள் மற்றும் ½ கிலோ கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுபாட்டில் மற்றும் கஞ்சா உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததாக ராமேசுவரம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நங்கூரம் என்ற முனியசாமி (வயது 50), ராமகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த கீரி முனி (57), சுனாமி காலனியை சேர்ந்த பகவதி (36), நைனாகனி (47) நேதாஜி நகரை சேர்ந்த சப்பானி (57), எம்.ஆர்.டி. நகரை சேர்ந்த வழி விட்டான் (47), காட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வெற்றி (50), ராம திருத்த பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (30) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.