7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
முசிறி அருகே 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் மகன் கோகுல்நாத் (வயது 13). இவர் சந்தபாளையம் அரசு நடுநிலை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று விஜயலட்சுமி மகன் கோகுல்நாத்திடம் பள்ளிக்கு செல்லுமாறு கூறிவிட்டு அருகே உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் கோகுல்நாத் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதற்கிடையில் கோகுல்நாத் பள்ளிக்கு வராத தகவலை சில மாணவர்கள் விஜயலட்சுமியிடம் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை
இதனால் தன்னை தாய் திட்டுவார் என்ற பயத்தில் கோகுல்ராஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த விஜயலட்சுமி மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.