கோவில்பட்டி உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதியில் 7.20 லட்சம் வாக்காளர்கள்
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரத்து 659 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 3 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட 16 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரத்து 659 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 3 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட 16 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. உதவி கலெக்டர் மகாலட்சுமி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலை கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, விளாத்திகுளம் தேர்தல் துணை தாசில்தார் வசந்த மல்லிகா, ஓட்டப்பிடாரம் தேர்தல் துணை தாசில்தார் ராதா
மகேஸ்வரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜ், தலைமை உதவியாளர் ராமகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார்கள் சங்கரநாராயணன் மகாராஜா வெள்ளத்துரை, கோவில்பட்டி நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கருணாநிதி, நகர அவை தலைவர் முனியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவர் அருண்குமார், மாவட்ட செயலாளர் துரைராஜ், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சுரேஷ், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி தொகுதி
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 569 பேர். இதில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 125 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 410 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 34பேரும் உள்ளனர். இத்தொகுதியில் ஆண்களை விட பெண்கள் 6 ஆயிரத்து 285 பேர் அதிகம் உள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 15 ஆயிரத்து 343. இதில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 329 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 995 பெண் வாக்காளர்களும், இதர வாக்களா்கள் 19 பேரும் உள்ளனர். இத்தொகுதியில் ஆண் வாக்காளர் களை விட பெண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 666 பேர் அதிகம் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 747 பேர். இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 633 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 64 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 50 பேரும் உள்ளனர். இத்தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 431 பேர் உள்ளனர்.