7,100 பயனாளிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உதவிகள்
சீர்காழி அருகே, அகணி ஊராட்சியில் 7,100 பயனாளிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உதவிகள் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்
சீர்காழி:
சீர்காழி அருகே அகணி ஊராட்சியில் வேளாண் துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் மற்றும் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஒன்றிய குழு உறுப்பினர் ரீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் வரவேற்று பேசினார்.இதில், வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கலந்து கொண்டு வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச உரங்களை வழங்கி பேசினார். இதில், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அன்பழகன், ஒன்றிய துணை செயலாளர் சசிகுமார், ஆத்மா தலைவர் முருகன், அண்ணா தொழிற்சங்க தலைவர் ராஜ்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சதீஷ் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சுகன்யா நன்றி கூறினார்.