தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 70 பேர் கைது

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-11 20:32 GMT


மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்று ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட கலந்து கொண்ட 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்