வக்கீலுக்கு ரூ.7 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

கடையில் ஜி.எஸ்.டி. எண் இல்லாமல் ரசீது வழங்கிய வழக்கில் வக்கீலுக்கு ரூ.7 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-03-14 20:50 GMT

நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் சுக்கூர் ரகுமானி (வயது 36). வக்கீலான இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.200 கொடுத்து மிச்சர், அல்வா, காரசேவு ஆகியவற்றை வாங்கினார். இதற்கு கொடுத்த ரசீதில் ஜி.எஸ்.டி. வரி ரூ.10 வசூலித்து உள்ளனர். ஆனால் அந்த ரசீதில் ஜி.எஸ்.டி. பதிவு எண் குறிப்பிடவில்லை. இதைக்கண்ட வக்கீல், மிட்டாய் கடையில் ரூ.10-ஐ திரும்ப கேட்டும் அவர்கள் கொடுக்க மறுத்து விட்டனர்.

இதுதொடர்பாக அவர், வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிளாட்ஸ்டன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் வழக்கை விசாரித்து, அரைகுறையான பில் வழங்கி சேவை குறைபாடு செய்ததால் சம்பந்தப்பட்ட வக்கீலுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.2 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.7 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்