இலங்கைத் தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர்.;

Update:2023-11-27 08:23 IST

தனுஷ்கோடி,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கைத் தமிழர்கள் பலர் அங்கிருந்து சிறிய படகுகள் மூலம் தங்களது குடும்பத்தினரோடு கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

அகதிகளாக தஞ்சமடைந்த அவர்கள் 7 பேரையும் மரைன் போலீசார் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு 7 இலங்கைத் தமிழர்களும் மண்டபம் முகாமில் தங்க வைக்கபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்