ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரிப்பு

ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரிப் பதாக வட்டார போக்குவரத்து அதிகாரி கூறினார்.

Update: 2023-02-04 18:45 GMT

ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரிப் பதாக வட்டார போக்குவரத்து அதிகாரி கூறினார்.

சாலை விதிகள்

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதை சப்- கலெக்டர் பிரியங்கா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. சீட் பெல்ட், ஹெல்மெட் போன்றவை அணிந்து பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும்.

நாம்போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து மீண்டும் அங்கு விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்துகளை தடுக்கவே தண்டனை மற்றும் அபராதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை புகைப்படம் எடுத்து அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாகன விபத்துகள்

முன்னதாக வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கி பேசியதாவது:-

ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களால் தான் 60 சதவீத சாலை விபத்துகள் நடைபெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் வாகனங்களை கவனக்குறைவாக ஓட்டுவதாலும் விபத்து நடக்கிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்ட கூடாது.

ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே ஓட்டுனர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்து கொள்ளலாம். விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

சாலை விதிகளை மதித்து விபத்தில்லா பொள்ளாச் சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த விவாத நிகழ்ச்சிக்கு கவிஞர் கவிதாசன் நடுவராக செயல்பட்டார். விழாவில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்