கதண்டு கடித்து 7 பேர் காயம்

மன்னார்குடி அருகே கதண்டு கடித்து 7 பேர் காயம்

Update: 2023-03-15 18:45 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி- திருவாரூர் சாலையில் சவளக்காரன் மெயின்ரோடு அருகே மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை கதண்டுகள் கடித்தது. இதில் மன்னார்குடியை அடுத்த அரிச்சபுரத்தை சேர்ந்த உமாவதி, மணி (வயது 46), வாழச்சேரியை சேர்ந்து சங்கர்(49), மஞ்சனவாடியை சேர்ந்த முத்துகுமார் (27), சேகரையை சேர்ந்த சதாசிவம் (62) உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். அவர்கனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்