புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-08 18:27 GMT

கரூர் டவுன், வெங்கமேடு, தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வாங்கல் பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதே பகுதிகளை சேர்ந்த மாரியப்பன் (வயது 42), குணசேகரன் (54), மணி (60), அம்மையப்பன் (52), ஜெயக்கொடி (44), சந்திரா (56), ஜெயராமன் (70) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ேவலாயுதம்பாளையம் ஆலமரத்து மேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜூ (51), புகழூர் நான்கு ரோடு பகுதியில் மளிகைக்கடையில் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் (67), அதே பகுதியில் மற்றொரு மளிகைக்கடையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (75) ஆகியோர் புகையிலை பொருட்களை விற்றதாக 3 பேர் மீதும் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்