மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 7 பேர் கைது

மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-08 21:45 GMT

கோவை துடியலூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரோடு, மகாத்மா காந்தி நகர், ஒண்டிப்புதூர், விளாங்குறிச்சி ரோடு, சங்கனூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அந்த பகுதிகளில் அதிரடி ரோந்து பணி சென்றனர். அதில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக ஆனந்தகுமார், விஜயகுமார், கதிர், ராம்பிரகாஷ், செந்தில்குமார், ஆறுமுகம், பாக்கியராஜ் ஆகிய 7 பேரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 91 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்