மது விற்ற 7 பேர் கைது
வடமதுரை பகுதியில் மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை அருகே உள்ள பெரும்புள்ளி, பாடியூர், தாமரைப்பாடி, காணப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், கிருஷ்ணவேணி ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 57), மோளப்பாடியூரை சேர்ந்த சரவணன் (43), தாமரைப்பாடியை சேர்ந்த பாண்டித்துரை (52), வத்தலதொப்பம்பட்டியை சேர்ந்த நரேந்திரன் (52), பா.புதுப்பட்டியை சேர்ந்த கணேசன் (42), பாடியூரைச் சேர்ந்த பவுல்ராஜ் (61), எட்டிக்குளத்துப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (45) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 105 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.