சாராயம் விற்ற பெண் உள்பட 7 பேர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 7 பேர் கைது

Update: 2023-05-28 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் போலீஸ் சரகம் தேவூர், எரவாஞ்சேரி, பெருங்கடம்பனூர், அத்திப்புலியூர் ஆகிய ஊராட்சிகளில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவூர் கடைத் தெருவில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட தேவூர் காந்திநகரை சேர்ந்த வேலுசாமி மகன் சந்தானம் (வயது 22), எரவாஞ்சேரி மாரியம்மன் கோவில் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட பூலாங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் அருண்குமார் (26), பெருங்கடம்பனூர் காலனி தெருவில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி இந்திரா காந்தி (65), அத்திப்புலியூர் காளியம்மன் கோவில் தெருவில் சாராயம் விற்ற குருமணாங்குடி தெற்கு தெருவை சேர்ந்த வேதரத்தினம் மகன் கார்த்திகேயன் (36), நீலப்பாடி ஓடம் போக்கி ஆற்று பாலம் பகுதியில் சாராயம் விற்ற குருமணாங்குடி மேலத் தெருவை சேர்ந்த நாகலிங்கம் மகன் ராமன் (30), பூலாங்குடி வெட்டாறு பாலம் அருகே சாராயம் விற்ற பூலாங்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த அப்பாசாமி மகன் விக்னேஷ் (28), எரவாஞ்சேரி சிவன் கோவில் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட எரவாஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநீலகண்டன் மகன் சூர்யா (27) ஆகிய 7 பேர் மீதும் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்