தந்தை- மகனை கடத்த முயன்ற 7 பேர் கைது

கூடலூரில் ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றிய தந்தை- மகனை கடத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-25 00:45 IST


கூடலூர் அருகே தேவர் சோலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாடந்துறை பகுதியில் 2 நபர்களை அடையாளம் தெரியாத சிலர் ஒரு வாகனத்தில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு அனைத்து பகுதிகளிலும் கண்காணிக்க பட்டு வந்தது. கூடலூர் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் திருமலைராஜன் அடங்கிய தனிப்படை தேடுதல் வேட்டை நடத்தினர். கடத்தப்பட்ட ஒருவரின் செல்போன் சிக்னல் மற்றும் கடத்தி சென்ற வாகனத்தின் எண்ணை வைத்து மசினகுடி பகுதியில் வைத்து மடக்கினர். அப்போது அந்த வாகனத்தில் கடத்தப்பட்ட 2 பேர் உள்பட 9 பேர் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடத்தப்பட்டது பாடந்துறை பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணி (வயது 48) அவரது மகன் ஹரிஹரன் (21) என்பதும், இருவரும் இரிடியம் இருப்பதாக கூறி கேரளா நபர்களிடம் ரூ.5 லட்சம் வரை பெற்று ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள், தந்தை மகனை வீட்டில் இருந்து கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து தந்தை மகனை கடத்தியதாக கேரள மாநிலம் எர்ணாகுளம் அப்துல் அசிஸ், பாலக்காடு சமீர், கொச்சின் ரகுராம், மேட்டுப்பாளையம் நடராஜன், கூடலூர் காசிம், வயல் பாபு என்கிற பாபுலால், பாடந்துறை ராஜேஷ்குமார், நிலோபர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும், பாலசுப்பிரமணி, ஹரிஹரன் மீது மோசடி வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்