பிளஸ்-1 மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் கைது

சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-14 19:02 GMT

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சைக்கிள் நிறுத்துவது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பிளஸ்-1 மாணவர் ஒருவர் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்த 4 மாணவர்கள் அந்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து மாணவனின் தாயார் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையறிந்த மாணவர்கள் சிலர், புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி அந்த மாணவரை மீண்டும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் மீண்டும் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்