பேட்டரியில் இயங்கும் 7 வாகனங்கள்

திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிக்காகபேட்டரியில் இயங்கும் 7 வாகனங்களை திருவாரூர் நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-28 18:45 GMT

திருவாரூர் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிக்காக 15-வது மானியநிதி குழு திட்டத்தின் கீழ் 2022-23 நிதியாண்டிற்கு ரூ.87 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 12 வாகனங்களை கடந்த மாதம் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிலையில் நேற்று திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிக்காக ரூ.14 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் 7 வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர சபை தலைவர் புவனபிரியா செந்தில் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார், சுகாதார அலுவலர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் தங்கராம், ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்