65 ஆயிரம் முன் களப்பணியாளர்கள்
பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் 65 ஆயிரம் முன் களப்பணியாளர்கள் உள்ளனர் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.;
வத்திராயிருப்பு,
பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் 65 ஆயிரம் முன் களப்பணியாளர்கள் உள்ளனர் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
தண்ணீர் திறப்பு
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். சிவகாசிஎம்.எல்.ஏ. அசோகன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பாசனத்திற்காக தண்ணீரினை மலர் தூவி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி தற்போது அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணற்ற விவசாயிகள் பயன்ெபறுவர்.
முன் களப்பணியாளர்கள்
தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள 65 ஆயிரம் முன் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயார்நிலையில் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு சிறந்த முறையில் பணியாற்றி இருந்தால் கடந்த வருடம் ஏன் சென்னையில் மழை நீர் தேங்கியது. கடந்த ஒரு வருடமாக தி.மு.க. ஆட்சியில் செய்த முன்னேற்பாடுகள் தான் தற்போது மழை நீர் உடனடியாக வழிவதற்கு காரணம். பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவினை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு சக்கர வாகனம்
தொடர்ந்து அவர் மீனவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் தனலட்சுமி, சிவகாசி சப்-கலெக்டர் (பொறுப்பு) அனிதா, வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவர் சிந்துமுருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம், நகர்மன்ற தலைவர் ரவிக்கண்ணன், ஒன்றிய செயலாளர் முனியாண்டி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல சாஸ்தாகோவில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.