ஓய்வு பெற்ற ஊழியரின் வீட்டில் 65 பவுன் நகை திருட்டு

ஆரணி அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற சார் பதிவாளர் அலுவலக ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து 65 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-10 17:02 GMT

ஆரணி

ஆரணி அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற சார் பதிவாளர் அலுவலக ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து 65 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ஊழியர்

ஆரணியை அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் சண்முகம் (வயது 65), அவரது மனைவி மரகதம் இருவரும் வசித்து வருகின்றனர்.

இன்று பகல் 10.30 மணி அளவில் அவர்கள் வீட்டின் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தனர். பின்னர் பகல் 11.30 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்க்கும்போது உள்பக்கம் தாழ்பாள் போட்டு இருந்தது.

உடனடியாக வீட்டில் பின்பக்கம் போய் பார்த்தபோது கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

65 பவுன் நகை திருட்டு

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த 3 பீரோக்களில் ஒரு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த வளையல், தங்க சங்கிலி, அட்டிகை, மோதிரம் உள்பட 65 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் ெசய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தம்பதி வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை திருடி சென்றுள்ளனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மேலும் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சண்முகம்-மரகதம் தம்பதியினரின் மகன் இறந்து விட்டார். அவரது மனைவி தற்போது சேத்துப்பட்டு அருகே அருள்நாடு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

மற்றொரு மகன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்