600 மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் வந்தன
600 மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் வந்தன.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு 600 புதிய மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்கள் நேற்று பலத்த பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து அந்த எந்திரங்கள் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டன. இதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 3 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும் காலாண்டு தணிக்கைக்காக மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், தனி தாசில்தார் (தேர்தல்) சோனைகருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.