வீ.மேட்டுப்பாளையம்
வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 6 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முத்தூர், வெள்ளகோவில், சின்னதாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் 10 பேர் கலந்து கொண்டு ஒரு கிலோ கரும்பு முருங்கை ரூ.25-க்கும், செடி முருங்கை ரூ.20-க்கும், மர முருங்கை ரூ.15-க்கும் கொள்முதல் செய்தனர் இத்தகவலை முருங்கை வியாபாரி செல்லப்ப கவுண்டர் தெரிவித்தார்.
========