வாலிபரிடம் 6½ பவுன் நகை பறிப்பு
மதுரை அரசு ஆஸ்பத்திரி அருகே வாலிபரிடம் 6½ பவுன் நகை பறித்து சென்றவரை ேபாலீசார் தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி தாலுகா கீரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 26). இவரது உறவினர் ஒருவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்த்து விட்டு ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள பொதுகழிப்பறைக்கு சென்றார். அங்கு அவரது பேண்டை கழற்றி வைத்திருந்த போது, அதில் வைத்திருந்த 6½ பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்று விட்டார். இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.