புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் மற்றும் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், பிரேம்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை முதல் மாலை வரை மணல்மேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர்.
6 பேர் கைது
இந்த சோதனையின்போது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக மணல்மேடு பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது 60), கிருஷ்ணமூர்த்தி மனைவி ஞானவல்லி (66) மற்றும் பாஸ்கரன் (47), கருப்பையா (51), முகமது சாதிக் (58), முனுசாமி (55) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 5 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணல்மேடு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.