சட்டவிரோதமாக மது விற்ற 6 பேர் கைது

சட்டவிரோதமாக மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-25 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். மணலூரைச் சேர்ந்த ஆனந்த் (வயது 38) என்பவரை பிடித்து பதுக்கி வைத்திருந்த 11 மதுபாட்டில்களும் நெல்முடிகரையைச் சேர்ந்த மணிகண்டன் (33) என்பவரை பிடித்து பதுக்கிய 14 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரை கைது செய்தனர்.சிங்கம்புணரி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது திண்டுக்கல் சாலையில் உள்ள மதுக்கடை மற்றும் சுக்காம் பட்டி சாலையில் உள்ள மதுக்கடை காப்பாரப்பட்டி சாலையில் மதுக்கடை, அரசனம்பட்டி சாலையில் உள்ள மதுக்கடை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற கருப்பையா, ராஜீவ் காந்தி, பன்னீர்செல்வம், கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்