பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-21 19:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொளுவங்காடு சுந்தரி குளம் வாரியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்தனர். இதில் திருநாலூர் தெற்கு நாகராஜன் (வயது 34), பன்னீர்செல்வம் (34), கருப்பையா (46), ஆனந்தன் (43), பூபாலன் (28), மதி (45) ஆகிய 6 பேரையும் கைது செய்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2,390-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்