சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேர் கைது
சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அருகே உள்ள கந்தன்குடி பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் குளித்தலை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட பாம்பனூர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 40), இறும்பூதிபட்டி பகுதியை சேர்ந்த அண்ணாவி (47), சுரேஷ் (26), மருதூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (29), குளித்தலையை சேர்ந்த சிலம்பரசன் (31), பாதிரிப்பட்டியை சேர்ந்த முருகேசன் (35) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.