6 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
தொற்றின் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தினசரி சளிமாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்றைய பரிசோதனையில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதியானது.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.