கனியாமூர் பள்ளி கலவரத்தில் மேலும் 6 பேர் கைது
கனியாமூர் பள்ளி கலவரத்தில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனா்.
சின்னசேலம்:
சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கலவரத்தில் ஈடுபட்டதாக பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம் தட்சிணாமூர்த்தி மகன் சஞ்சீவ் (வயது 22), சின்னசேலம் அருகே தகரை மெயின் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலாஜி (23), தியாகதுருகம் அடுத்த புதுபல்லகச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் பரமேஸ்வரன்(22), வேப்பூர் சேப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த கொளஞ்சி மணி மகன் விஜய் (28), கச்சராபாளையம் அடுத்த மட்டப்பாறை ஏழுமலை மகன் துரைப்பாண்டி(20), வேப்பூர் அருகே காசாக்குடி கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த குமரவேல் மகன் அய்யனார் ஆகியோரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.