திருட்டு வழக்கில் ஈடுபட்டவருக்கு 6 மாதம் சிறை

வள்ளியூர் அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-02-27 19:45 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே உள்ள கடம்போடுவாழ்வு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு (வயது 67). இவர் வள்ளியூரில் இருந்து ஏர்வாடி ரோட்டில் உள்ள சாமியார் பொத்தை கோவிலுக்கு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து சுடலைகண்ணு வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை திருடியதாக களக்காடு ஜவகர் வீதியைச் சேர்ந்த நெல்சன் ராஜா (45) என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஆனந்த் விசாரித்து நெல்சன் ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்