விவசாயியிடம் ரூ.6½ லட்சம் திருட்டு

கீரனூரில் விவசாயியிடம் ரூ.6½ லட்சம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-09 20:27 GMT

விவசாயி

கீரனூர் அருகே உள்ள தாயினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 54), விவசாயி. இவர் வீடு கட்டுவதற்காக கீரனூரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.6½ லட்சத்தை மஞ்சள் பையில் எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

பின்னர் குளத்தூர் என்ற இடத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் முன்பு வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

வலைவீச்சு

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் அவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார். ஆனால் அந்த ஆசாமிகள் புறவழிச்சாலை வழியாக தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்