சேலத்தில் இளம்பெண் உள்பட 2 பேரிடம் ரூ.6¼ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலத்தில் இளம்பெண் உள்பட 2 பேரிடம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணின் செல்போன் வாட்ஸ்-அப்புக்கு தகவல் ஒன்று வந்தது. அதில் குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக ரூ.4 லட்சத்து 77 ஆயிரம் கட்டினார். ஆனால் அதன்பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண் சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஒருவரும், ஆன்லைனில் வந்த வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை நம்பி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்டி ஏமாந்தார். இதுதொடர்பான புகாரின் பேரிலும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.