பஸ்சில் கடத்திய 6½ கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

பஸ்சில் கடத்திய 6½ கிலோ புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-26 17:12 GMT

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், தமிழக எல்லையான பத்தலப்பல்லி போலீஸ் சோதனை சாவடியில், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கடத்தப்படுகிறதா என பேரணாம்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பத்தலப்பல்லி சோதனை சாவடியில் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது 6½ கிலோ எடையுள்ள ஹான்ஸ் புகையிலை பொருள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 37) என்பவர் ஹான்சை சென்னைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்